திருவரங்கமும் அரங்கநாதனும்
2015 ஜூலையில் என் வாழ்க்கை மாறிப்போனது. என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோகம் என்னை மாற்றியது . கடவுளை என்னை அதிகம் நினைக்க வைத்தது. ஆன்மீகப் பாதையின் பக்கம் என்னை போக வைத்தது. அமைதி இழந்திருந்த என்னை எனது பகவான் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் என்னை சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் செல்ல சொன்னார். .சென்றேன். அந்த திவ்ய தேசத்தில் காலடி எடுத்து வைத்தாலே எல்லோருக்கும் ஆன்மீகத்தன் மீது ஆர்வம் வந்துவிடும் என்று நினைக்கிறேன். அந்த சயனப் பெருமான் எனக்கு வைணவத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தினான். ஸ்ரீரங்கம் கோவில் எனது அமைதியின் புகலிடமானது. தினம் தினம் செல்வேன் அந்த சயனப் பெருமானை சேவிக்க.
கோவிலை சுற்றி பார்ப்பேன் ஒவ்வொரு சன்னிதிக்கும் செல்வேன். ஒவ்வொரு சன்னதியின் பின்னணி பற்ற தெரிந்து கொள்வேன். அந்த பின்னணிகளை பற்றி தெரிந்து கொள்ள கொள்ள ஸ்ரீரங்கம் பற்றி வைணவம் பற்றி வியந்து போனேன். அது என்னை வைணவம் பற்றி அதிக தேடலில் ஈடுபடவைத்தது.
இந்த இடத்தில் ஒரு சின்ன தகவல்
என்னை அதிகம் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் திரு.சுஜாதா. அந்த ஸ்ரீரங்கம் வீதிகளில் நடக்கும்போது பலர் எனது நினைவில் வந்து போவார்கள். அவர்களில் சுஜாதாவும் உண்டு. அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகளை எத்தனை முறை படித்திருப்பேன் என்று நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை . சந்தோஷமாக இருந்தாலும் அதை எடுத்துக் படிப்பேன் மனம் கஷ்டத்தில் இருக்கும்போதும் அதை படிப்பேன். அதனால் அதில் வரும் வீதிகள் பாத்திரங்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி .ரங்கு விலாஸ் கடை இங்கு தான் இருந்திருக்குமோ, குண்டு ரமணி .இந்த வீதி வழியாகத்தான் சென்றிப்பாளோ, திண்ணா தொண்டரடி பொடியாழ்வார் சந்நிதியில் தானே அமர்ந்து உபன்யாசம் செய்வான் என்று நினைத்துக்கொள்வேன்.
வைணவம் பற்றிய தேடுதலில் எனக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் ராமானுஜர். சமூக சீர்திருத்தங்கள் அந்தக் காலத்திலேயே செய்த அந்த மகானை பற்றி படிக்க படிக்க வியந்து போனேன்.

No comments:
Post a Comment