கனடா தரும் சுவாரசியமும் ஆனந்தமும்
தற்போது எனது இருப்பிடம் கனடா. ஆறு மாத காலத்திற்கு. என் பெண்ணுடன் பல இடங்களுக்கு போய் வந்து கொண்டிருக்கிறேன். என் பெண்ணை பார்க்கப் போகிறோம் என்று மகிழ்ச்சி என்னை பிராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியதிலிருந்தே அதிகம் ஆட்கொண்டது. ஆனால் மாண்ட்ரியலில் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது ஒட்டாவா (இங்கு ஆட்டோவா என்கிறார்கள். எனவே நானும் ஆட்டோவா என்றே குறிப்பிடுகிறேன். சொந்த ஊர்க்காரர்கள் எப்படி அவர்களது ஊரை குறிப்பிடுகிறார்களோ அப்பிடித்தான் நாமும் குறி. ப்பிட வேண்டும் !!!} விமானத்திற்காக. கண்ணுக்கெட்டிய தூரத்தில் ரன்வே .அங்கு பார்த்த காட்சி என்னை எழுத்தாளர் சுஜாதாவிடம் இழுத்து சென்றது. ஆம். ப்ரொபெல்லர் விமானங்கள் அங்கு நின்று கொண்டிருந்தன. சுஜாதா தனது ப்ரியா நாவலில் ப்ரொபெல்லர் விமானம் பற்றி குறிப்பிட்டிருப்பார். ப்ரியாவை கடத்தி சென்றவர்கள் ப்ரியா பேசிய ஆடியோ கேசட் அனுப்பியிருப்பார்கள். (1970 ல் வந்த நாவல். அப்போதெல்லாம் ஆடியோ கேசட் டேப் ரெகார்டர்த்தான்} அதை போட்டு கேட்டு பிரியா எங்கிருக்கிறாள் என்பதை அறிய முயல்வார் கணேஷ்.. கண்டுபிடிக்க முடியாது. அப்போது பிரியா குரலை விடுத்து பின்னணியில் கேட்க்கும் சத்தத்தை கேட்பதில் கவனம் செலுத்துவார். ப்ரோபெல்லோர் விமானம் பறக்கும் சத்தம் கேட்கும். "இந்த ஜெட் யுகத்தில் ப்ரோபெல்லோர் விமானமா" என்று ஆச்சர்யப்பட்டு ப்ரோபெல்லோர் வி மானம் பறக்க அனுமதிக்கப் பட்டிருக்கும் விமான நிலையங்கள் எவையெவை என்று கண்டுபிடிக்குமாறு ஸ்காட்லான்ட்யாரிடம் சொல்லுவார். லேட்டரல் திங்கிங் பற்றியும் சுஜாதா இந்த இடத்தில் குறிப்பிட்டிருப்பார் எனக்கு அந்த விமானங்களை பார்த்ததும் சுஜாதாவும், அவரது ப்ரியா கதையும் அதை நான் பல தடவைகள் படித்ததும் தான் நினைவுக்கு வந்தன.
அதே போல் மாண்ட்ரியலில் ஆட்டோவா வந்தடைய காத்துக்கொண்டிருந்ததை பார்த்தபோது பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும்போது சென்ட்ரல் ரயில் நிலையம் நெருங்கி விட்டது என்று சந்தோஷப படும்போது பேசின்பிரிட்ஜ் வந்ததும் பல சமயங்களில் 15 அல்லது 20 நிமிடம் ரயிலை நிறுத்திவிடுவார்கள். சிக்னல் கிடைக்க வேண்டும் என்று. பொறுமையே போய்விடும் நமக்கு. அதுபோலத்தான் ஆயிற்று மாண்ட்ரியலில் காத்திருந்தது. 40 நிமிட விமானப் பயணத்திற்கு 3 மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் விமான நிலையத்தில் அங்கு சென்று கொண்டிருந்தவர்களை பார்த்துக்கொண்டிருந்ததே படு சுவாரசியமாக இருந்தது.

No comments:
Post a Comment