கனடாவின் தலைநகரான ஆட்டோவாவில் சில விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன . கனடா குளிர் பற்றி குறிப்பிட்டிருதேன் வெயிலும் வெப்பமும் நிறைந்த கோடை இவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை தான். குளிரிலிருந்து பாதுகாத்து கொள்வற்கான ஜாக்கெட் வார்மர் கையுறை போட்டுக் கொள்ளாமல் பிரீயாக அவர்கள் நடமாடுவது இந்த சமயத்தில்தான். (இந்த முறை சில நாட்களில் வானிலை மோசமாவதும் மழை பெய்வதும் நடக்காமல் இல்லை) அதனால் சூரியனும் வெப்பமும் இவர்களை குஷி படுத்துவதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. வெப்பம் 20 டிகிரி ஆகிவிட்டால் அவர்களது சந்தோஷம் வீதியில் தெரிகிறது. ஆண்களும் பெண்களும் ஷாட்ஸ் பனியன் அணிந்து வாக்கிங் ஜாகிங் ஸ்கேட்டிங் செல்வது சகஜம். இதென்ன புதிய விஷயமா என்று யாரும் சலித்துக்கொள்ள வேண்டாம். வாக்கிங்கும் ஜாகிங்கும் காலையில் இல்லை. மதியம். 12மணியிலிருந்து 4 மணி வரை சாலைகளில் ஜாகிங் செல்வோரை பார்க்க முடிகிறது. நடை பாதை நடப்பதற்கு மட்டுமே என்பதை யாரும் மீறுவதில்லை என்பதால் வாக்கிங் ஜாகிங் செல்வது போக்குவரத்தை பாதிப்பதில்லை. கார் வருகிறதா பஸ் வருகிறதா என்று பார்த்து ஜாக்கிரதையாக நடக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. பஸ்கள் கார்கள் செல்லும் சாலையை ஒட்டி தனியாக இருக்கும் நடை பாதையில்தான் நடக்க வேண்டும் என்பது விதி. அதனால்தான் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் சமயத்திலும் நடை பாதையில் ஸ்கேட்டிங்கும் ப்ராக்டிஸ் செய்கிறார்கள் .அதே போல் சைக்கிளிங்கும் .ஆனால் சைக்ளிங் உடல் பயிற்சிக்கு மட்டுமே. யாரும் அதை போக்குவத்துக்கு பயன்படுத்துவதில்லை. மைதானங்களில் சைக்ளிங் பயிற்சி செய்ய விரும்புபவர்கள் சைக்கிளை பஸ்ஸில் எடுத்து செல்கிறார்கள். சைக்கிள் வைப்பதற்கு என்று பஸ்ஸில் இடம் இருக்கிறது .
இதை போல மற்றொரு விஷயமும் என் கவனத்தை ஈர்த்தது . அதுதான் கைக்குழந்தையுடன் பெண்கள் வருவது. குழந்தையுடன் பெண்கள்வருவதில் என்ன இருக்கிறது என்று இதை படிப்பவர்கள் நினைக்கலாம். இரண்டு குழந்தைகளை பிராமில் வைத்து தள்ளிக்கொண்டு வந்து பஸ்ஸில் பிராமை ஏற்றி பயணம் செய்யும் பெண்களை பார்ப்பது சகஜம்.வீட்டில் வேலைக்கு ஆட்கள் வைத்துக்கொள்வது அறவே இல்லை என்பதால் பெண்கள் வெளியே போக வேண்டி இருந்தால் யாரையும் சார்ந்திராமல் குழந்தையை பிராமில் வைத்து தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார்கள். பிறந்து ஒரு மாதம் ஆன கை குழந்தையைக்கூட பிராமில் வைத்துக்கொண்டு மால்களுக்கு அவர்கள் வருவது மிக சஜமான ஒரு விஷயம் .

எந்த வேலைக்கும் யாரையும் சாராமல் சுதந்திரமாக பெண்கள் இங்கு செயல் படுவது மகிழ்ச்சி தருகிறது
No comments:
Post a Comment