இன்று மிகவும் சுவாரசியமான ஒரு இடத்திற்கு போய் வந்தோம் நானும் என் பெண்ணும். . அதாவது கனடா விமான மற்றும்விண்வெளி அருங்காட்சியகத்திற்கு. ஜூலை 1 ஆம் தேதி கனடா பிறந்து 150 ஆண்டுகளாகிறது. அதற்கான கொண்டாட்டங்கள் இந்த மாதமே துவங்கிவிட்டன. அதன் ஒரு அங்கமாக ஆட்டோவா கதவுகள் திறக்கின்றன "Doors open Ottawa"என்கிற தலைப்பில் நகரில் இருக்கும் வரலாறு கலாச்சார , நினைவு சின்ன மையங்களை மக்கள் இலவசமாக கண்டு களிக்க வாய்ப்பு அளிக்கப் பட்டது .அதனால் அந்த அருங்காட்சியகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது காரில் செல்பவர்கள் நெடுஞசாலை வழியே சென்று விடுகிறார்கள். பஸ்சில் செல்பவர்களுக்கு நேரிடை பஸ் கிடையாது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறங்கி கிட்டத்தட்ட ஒருகிலோமீட்டர் நடக்க வேண்டும். அதில் 10 நிமிடம் இரு புறமும் மரங்களும் செடிகளும் அடர்த்தியாக வளர்ந்து நடுவில் செல்லும் ஒற்றையடி பாதையில் நடக்க வேண்டும். அழகான கிராமத்து சூழலில் அந்த இடம் இருந்தாலும் தனியாக நடக்க சற்று பயமாக இருந்தது வாஸ்தவம்தான். இதன் நடுவே ஒரு சிறு மரப் பாலம் வேறு. மரப் பாலத்தை கடந்து பறவைகளின் கீச் கீச் சத்தத்தின் நடுவில் நடக்கையில் ஒரு நாட்டின் தலைநகர் நடுவே இப்படி இயற்கை அழகு கொஞ்சமும் குன்றாமல் ஒரு இடம் எப்படி இருக்கிறது என்று ஆச்சர்யமாக இருத்தது. என் பெண் கையில் கூகுள் மேப்பை வைத்துக் கொண்டு அது காட்டும் வழியில் நடந்தாலும் நான் எனது நச்சரிப்பை நிறுத்தவில்லை . இது சரியான வழியா ? அது எப்பிடி ஒரு அருங்காட்சியகம் காட்டு வழி மாதிரியான இடத்தை கடக்க கூடியதாக இருக்கும்? இல்லை நாம் தப்பான வழியில் வந்து விட்டோம் என்று புலம்பிக் கொண்டே நடந்தேன். என் பெண்ணோ "அம்மா கூகுள் தப்பாக வழி காட்டாது , நான் நடக்க நடக்க நீ பாட்டுக்கு என் பின்னால் வா, " என்றாள் .10 நிமிடம் அந்த ஒற்றியடிப்பாதையில் நடந்து அதை கடந்து வந்தால் நெடும்சாலை. சாலையை கடந்தவுடன் நம்மை வரவேற்கிறது கனடா விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்.அதில் reserve Hangar என்கிற இடம் தான் பார்வையாளர்களுக்கு திறந்து விடப் பட்டிருந்தது. உள்ளே நுழைந்த அடுத்த வினாடி நான் பிரமித்து போனேன் .நமது விக்ரம் படத்தில் ஏவுகணை நிறுத்தி வைத்திருப்பார்களே அது மாதிரி பல மடங்கு பெரிய ஹால். நம்மை சுற்றியும் விமானங்கள் . கிட்டத்தட்ட 60 விமானங்கள் அங்கு பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கிறது . முதல் உலகப் போர் , இரண்டாம் உலகப் போரில் பயன்டுத்தப்பட்ட விமானங்கள் , 1930களில் தயாரிக்கப்பட்ட விமானத்திலிருந்து இப்போது வரையிலான அரிய விமானங்கள் அங்கிருந்தன சிறியதும் பெரியதுமாய். .என்னதான் விமானம் என்பது இன்று சகஜமாகி விட்டாலும் எழுத்தாளர் சுஜாதா வார்த்தையில் அந்த "அலுமினிய பறவை" யை அதிலும் நிறைய ப றவைகளை மிக அருகில் பார்க்கும்போது ஒரு வியப்பும் பிரமிப்பும் ஏற்படாமல் இருப்பதில்லை.
பிரம்மாண்டமான அந்த மாபெரும் ஹாலில் உலகப் போரில் சாகசம் செய்த விமானங்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தன. ஓய்வு பெற்ற விமானிகள் அந்த விமானங்கள் பற்றி விளக்கி கொண்டிருந்தார்கள்.Canadair என்கிற விமானம் ஒரு முறை எரி பொருள் நிரப்பினால் 31 மணி நேரம் ஓடுமாம்.அதுவும் அங்கிருந்தது . அந்த விமானம் 1957 ல் வடிவமைக்கப் பட்டதாம். அதே போன்ற மற்றொரு விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்துவிட்டது என்று அங்கிருந்த ஓய்வு பெற்ற விமானி விளக்கி கொண்டிருந்தார்.. விமானிகள் தொழில் நுட்பங்கள் பற்றி அதிகம் விளக்கினார்கள் . . எனக்கு அந்த இடத்தில் என் தங்கையின் குடும்பம் தான் நினைவுக்கு வந்தது. விமானங்கள் பற்றிய ஆர்வமும் ஏரோமாடலிங்கில் வல்லுனரும் ஆகிய என்தங்கை கணவர் திரு .பார்த்தசாரதி அங்கிருந்தால் அந்த விமானிகளிடம் பல கேள்விகள் கேட்டு ஏகப்பட்ட விஷயங்களை அறிந்து கொண்டிருப்பார். விமானி பயிற்சி பெற்ற என் தங்கையின் பெண்ணோ பல தொழில்நுட்ப விளக்கங்களைக் கேட்டு தெரிந்து கொண்டிருப்பாள் என்று நானும் என் பெண்ணும் பேசிக் கொண்டோம்.
கனடாவின் முன்னாள் பிரதமர் பியர் த்ருடோ(இந்நாள் பிரதமர் ஜஸ்டின் த்ருடோ வின் தந்தை) எட்டு பேர் பயணம் செய்யக் கூடிய Lockheed விமானம் வைத்திருந்தாராம். அப்போது சிறுவனாக இருந்த இப்போதைய பிரதமர் ஜஸ்டின் அதில் தன து நண்பர்களுடன் புளோரிடாவில் இருக்கும் டிஸ்னி லாண்டுக்கு செல்வாராம். அந்த எட்டு பேர் அமரும் விமானமும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றிருந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் விமானங்களுக்கு நடுவே இருந்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பி வர மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம் .
கார் வாங்க வேண்டும் என்று சில நாட்களாக சொல்லிக் கொண்டிருந்த எனது பெண் அருங்காட்சியகத்தை விட்டு வெளி வந்த போது "அம்மா கார் வேண்டாம்மா ....8 seater விமானம் தான் வாங்க வேண்டும்மா " என்றாளே பார்க்கலாம்!!!!!!
![]() |
அருங்காட்சியகத்தில் விமானங்கள் |
கனடாவின் முன்னாள் பிரதமர் பியர் த்ருடோ(இந்நாள் பிரதமர் ஜஸ்டின் த்ருடோ வின் தந்தை) எட்டு பேர் பயணம் செய்யக் கூடிய Lockheed விமானம் வைத்திருந்தாராம். அப்போது சிறுவனாக இருந்த இப்போதைய பிரதமர் ஜஸ்டின் அதில் தன து நண்பர்களுடன் புளோரிடாவில் இருக்கும் டிஸ்னி லாண்டுக்கு செல்வாராம். அந்த எட்டு பேர் அமரும் விமானமும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றிருந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் விமானங்களுக்கு நடுவே இருந்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பி வர மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம் .
கார் வாங்க வேண்டும் என்று சில நாட்களாக சொல்லிக் கொண்டிருந்த எனது பெண் அருங்காட்சியகத்தை விட்டு வெளி வந்த போது "அம்மா கார் வேண்டாம்மா ....8 seater விமானம் தான் வாங்க வேண்டும்மா " என்றாளே பார்க்கலாம்!!!!!!
Hi I follow your blog religiously and I have to admit I'm a huge fan of your writing.Keep up the good work!. I truly look forward to your various visits to places as that gives me an opportunity to view the place from a different perspective.Stay awesome!!
ReplyDeletethank you
Delete