கனடாவில் எனது குக்கிங் அனுபவங்களை பற்றி சொல்லியே தீர வேண்டும். சமையல் அனுபவம் வேடிக்கையானதாக இருக்கிறது இங்கு. அபார்ட்மெண்ட்களில் எல்லா வீடுகளிலும் மேல் கூரையில் தீ எச்சரிக்கை மணி எனப்படும் Alarm இருக்கிறது. அடுப்பு மின்சார அடுப்பு . அடுப்பில் வைத்திருக்கும் பாத்திரத்திலிருந்து கொஞ்சம் புகை வந்தால் போதும் , அலாரம் அடித்துவிடும். வீட்டிலிருக்கும் அலாரம் அபார்ட்மெண்ட் கட்டுப்பாடு அறையுடன் இணைக்கப் பட்டிருக்கும். நாம் அடுப்பை அணைக்காமல் (அல்லது அலாரம் அருகே சென்று ஒரு துண்டை வைத்து அதற்க்கு வீசி விடுவது போல் வீசினால் அது அடிப்பதை நிறுத்தி விடும் . சில நிமிடங்கள் கழித்து அடுப்பில் நமது வேலையை மீண்டும் தொடரலாம்). தொடர்ந்து பாத்திரத்திலிருந்து புகையோ ஆவியோ வந்து கொண்டிருந்தால் அலாரம் தொடர்ந்து அடிக்கும் அபார்ட்மெண்ட்டிலிருந்து தீ அணைக்கும் மைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுவிட்டால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் டிங் டிங் என்று மணி அடித்தவாறு 3 தீ அணைக்கும் வாகனங்கள் தீ அணைப்பு வீரர்களுடன் வந்து விடும் . இதை என் பெண் முதலிலேயே சொல்லியிருந்தாள் . பல்கலை கழக மாணவியாக இருந்த சமயத்தில் பிற மாணவிகளுடன் வீட்டை பகிர்ந்துகொண்ட காலத்தில் ஒருவர் சமைக்கும்போது மற்றொருவர் அலாரத்தை கவனித்து கொள்வார்கள் ;அதற்கு வீசி சிச்ருஷை செய்வார்கள் என்பதை என் பெண் சொல்லியிருந்தாள் .
இருந்தாலும் நேரிடை அனுபவம் இப்போதுதான். என் பெண் அலுவலகம் சென்ற பின் நான் சமைக்க ஆரம்பித்த போது தான் சிரமம் தெரிந்தது. இப்போது இந்த சிரமம் வேடிக்கையாகிவிட்டது. குழம்பு நன்கு கொதிக்கட்டும் என்று விட்டால் நல்ல வாசனையுடன் கொதிக்கும்போது "பிங் பிங் " என்று அலாரம் அடித்து விடும். இத்தனைக்கும் புகைபோக்கி எனப்படும் சிம்னியை "ஆன்" செய்துவிட்டுத்தான் சமையல் ஆரம்பிக்கிறேன்.துண்டை எடுத்து அதற்கு வீசி விட்டால் அலாரம் நின்று விடும். இருந்தாலும் அந்த பிங் பிங் சப்தம் ஒரு பதட்டத்தை ஏற்படுத்துவது உண்மைதான். அதிலும் குறிப்பாக கடுகு தாளித்து விடுவது ஒரு பெரிய காமெடி. கடாயை காய விட்டு அடுப்பை அணைத்து பின் எண்ணெய் விட்டு சில வினாடிகள் கழித்து அடுப்பை அணைத்து அதன் பின் கடுகு , இன்ன பிற சாமான்கள் போட்டு அது சரியாக வெடிக்காவிட்டால் மீண்டும் அடுப்பை ஆன் செய்து ... முதலில் சலிப்பாக இருத்தது இப்போது வேடிக்கையாகிவிட்டது. இதே போல்தான் தோசை வார்த்தலும் . இரண்டு தோசை வார்த்து முடிக்கும்போது பிங் ..பிங் அடித்துவிடும். அடுப்பை அணைத்துவிட்டு ஒரு நிமிடம் கழித்து மீண்டும் அடுப்பை ஆன் செய்து அடுத்த 2 தோசைகளை வார்க்க வேண்டும்.அதற்கு பேசாமல் இட்லி செய்து விடலாம் என்று தோன்றும். சப்பாத்தி கேட்கவே வேண்டாம். ஒருவர் சப்பாத்தி பண்ணவேண்டும், மற்றொருவர் அலாரம் பக்கத்தில் அதற்கு "சிச்ருஷை" செய்ய தயாராக நிற்க வேண்டும்.
இந்த இடத்தில் அரசாங்கத்தின் பொறுப்புணர்வு எச்சரிக்கை உணர்வை சொல்லியே ஆக வேண்டும் கட்டிட கட்டுமாணத்தில் அதிகம் மரங்கள் பயன்படுத்தப்படுவதால் கட்டிடங்களில் தீ பிடித்துவிடக் கூடாது என்பதில் அரசு ரொம்ப கவனமாக இருக்கிறது. அனைத்து வீடுகளிலும் தீ எச்சரிக்கை மணி பொறுத்த வேண்டும் என்பது கட்டாயம். 5 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து தீ எச்சரிக்கை மணி அடித்தால் உடனே தீயணைப்பு வண்டிகள் தீயணைப்பு வீரர்களுடன் வந்து விடுகிறது என்பது அரசாங்கம் எவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த இடத்தில் நம்மூர் சென்னை சில்க்ஸ் கட்டிட தீ விபத்து பற்றி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
வீடுகளில் புகை வரக் கூடாது என்பதால் வீட்டுக்குள் யாரும் சிகரெட் புகைக்க முடியாது. புகை பிடிப்பவர்கள் பால்கனியில் அல்லது கட்டிடத்திற்கு வெளியேதான் வந்துதான் புகைக்க முடியும்.
வீடுகளில் கடவுள் படங்களுக்கு முன் ஊதுபத்தி தசாங்கம் ஏற்ற முடியாது. ஏற்றினால் பிங் .. பிங் தான். ஆனால் விளக்கு ஏற்ற முடிகிறது. வசந்த காலம் ,கோடை காலத்தில் சாலையோரங்களில், அபார்ட்மெண்ட் களுக்கு வெளியே பசுமை பசுமை அப்படியொரு பசுமை. பல நிறங்களில் இலைகள் இருக்கும் செடிகளையும் பார்க்க முடிகிறது. அதை தவிர பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. சாலைகளில் அரசாங்கமும் அபார்ட்மெண்ட்களில் ரெண்டல் நிர்வாகமும் இந்த செடிகள் பூக்கள் வளர்ப்பு பணியை செய்கின்றன. அழகுக்காக வளர்க்கப்படும் பராமரிக்கப்படும் செடிகள் ,பூக்கள். பூக்களை பறிக்கக் கூடாது என்பது விதி .பூக்களை பறிக்காதீர்கள் என்றெல்லாம் எழுதி போடவில்லை . எல்லோரும் விதிமுறைகளை மதிக்கிறார்கள்.
வீட்டில் கடவுள் படங்களுக்கு பூக்கள் வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை .அபார்ட்மென்ட்டாக இல்லாமல் தனி வீடாக இருந்தால் நாமே வீட்டுக்கு வெளியே செடி வளர்த்துக்கொள்ளலாம். .அபார்ட்மெண்டில் அது முடியவில்லை. வீட்டை சுற்றி எங்கும் பூக்கள் . ஆனால் அந்த பூக்களை தொட முடியாது. இதை பார்க்கையில் எனக்கு ஆங்கில கவிஞர் சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ்ஜின் "The Rime of the Ancient Mariner" செய்யுளில் வரும் "water water everywhere, nor any drop to drink" என்கிற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!!!!!!

![]() |
பல வண்ண இலைகளுடன் கூடிய சாலையோர செடிகள் |
வீட்டில் கடவுள் படங்களுக்கு பூக்கள் வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை .அபார்ட்மென்ட்டாக இல்லாமல் தனி வீடாக இருந்தால் நாமே வீட்டுக்கு வெளியே செடி வளர்த்துக்கொள்ளலாம். .அபார்ட்மெண்டில் அது முடியவில்லை. வீட்டை சுற்றி எங்கும் பூக்கள் . ஆனால் அந்த பூக்களை தொட முடியாது. இதை பார்க்கையில் எனக்கு ஆங்கில கவிஞர் சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ்ஜின் "The Rime of the Ancient Mariner" செய்யுளில் வரும் "water water everywhere, nor any drop to drink" என்கிற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!!!!!!
No comments:
Post a Comment