சிஎன் டவர் எப்படி என்னை பிரமிக்க வைத்ததோ அதே போல பிரமிக்க வைத்தது நயாகரா நீர் வீழ்ச்சி.
 |
Horseshoe falls: ஆவேசமாக கொட்டும் தண்ணீர் |
 |
அருவியை அருகே சென்று ரசிக்க அமெரிக்கா படகு சவாரி |
டொரொன்டோ அருகே இருக்கும் விட்பியிலிருந்து கிட்டத்தட்ட 185 கிலோ மீட்டரில் இருக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி. உலகின் இயற்கையான அதிசயங்களில் 7 வது இடத்தை பெற்றிருக்கி றது .விட்பியில் இருக்கும் என் அக்கா பெண் மற்றும் அவர் கணவ ருடன் நாங்கள் நயாகராவுக்கு காரில் பயணமானோம். வாரக் கடைசியில் சென்னையிலிருந்து மஹாபலிபுரம் போய் நாள் முழுவதும் அங்கு கழித்துவிட்டு மாலையில் திரும்புவது போல்தான் டொரோண்டோ நயாகரா பயணமும்.
நாங்கள் காலை 9 மணிக்கு விட்பியிலிருந்து கிளம்பி இரவு 9 மணிக்கு திரும்பி வந்தோம். போகும் வழியில் நிறைய திராட்சை தோட்டங்களை பார்க்க முடிந்தது . நயாகராவை நெருங்கும்போது சாலை இரண்டு பிரிவாக பிரிகிறது. ஒன்று அமெரிக்கா செல்வது . மற்றொன்று கனடா பக்கத்து நயாகரா செல்வது. பிரியும் இடத்தில அறிவிப்பு பலகை இருக்கிறது. பார்த்து செல்ல வேண்டும்.
 |
நீர் வீழ்ச்சியில் வானவில் |
நயாகரா நதியின் மேற்கு பக்கம் இருப்பது கனடாவின் ஒண்டோரியோ ப்ரோவின்சில இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி நகரம். கிழக்கு பக்கத்தில் இருப்பது நியூயார்க். நயாகரா நதி அமெரிக்கா மற்றும் கனடாவின் சர்வதேச எல்லையாக இருக்கிறது.Horseshoe falls, American Falls, Bridal veil Falls என்கிற மூன்று நீர்வீழ்ச்சிகள் சேர்ந்ததுதான் நயாகரா நீர்வீழ்ச்சி. இதில் ஹார்ஸ் ஷூஸ் நீர்வீழ்ச்சி கனடா பக்கம் இருக்கிறது மற்ற இரண்டும் அமெரிக்கா பக்கம். நீர்வீழ்ச்சியை இரு பக்கத்திலிருந்தும் பார்க்க முடியும். சர்வதேச எல்லையை ரெயின்போ பிரிட்ஜ் என்று பெயருள்ள ஒரு பாலம் இணைக்கிறது. கனடா பக்கத்திலிருந்து பார்ப்பவர்கள் அமெரிக்கா பக்கத்திலிருந்தும் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் பாலத்தை கடந்து செல்ல வேண்டும். அதே போல் அமெரிக்கா பக்கத்திலிருந்த்தும் பாலத்தை கடந்து வந்து பார்க்கலாம். ஆனால் இவ்வாறு இருத
ரப்பும் மாறி சென்று பார்ப்பதற்கு விசா தேவை. பாலத்தின் இரு பக்கத்திலும் இருக்கும் இமிகிரேஷன் அலுவலகத்தில் விசா பெற்றுத்தான் ஒரு தரப்பு அடுத்த தரப்பை ப்பார்க்க முடியும்.
மூன்று நீர்வீழ்ச்சிகளில் மிகப் பெரியது மற்றும் நீளமானது கனடா பக்கத்தில் குதிரை லாட வடிவத்தில் இருக்கும் Horseshoe நீர்வீழ்ச்சி. ஒன்டோரியாவின் டேபிள் ராக் என்ற இடத்திலிருந்து நியூயார்க்கில் கோட் தீவு வரை இது நீண்டிருக்கிறது. கனடியன் பால்ஸ் என்றும் அறியப்படும் ஹார்ஸ் ஷூஸ் பால்ஸின் உயரம் 188 அடி அஃலம் 2600 அடி . 188 அடியிலிருந்து தண்ணீர் அதிக சக்தியுடன் திறனுடன் கொட்டும்போது கண்ணுக்கு தண்ணீர் தெரிவதில்லை புகை மண்டலமாக தெரிகிறது. வெயிலில் நிற பிரிகை ஏற்பட்டு நீரில் வானவில் தெரிவது கண்கொள்ளாக் காட்சி.
 |
ரெயின்போ பாலம், கனடா தரப்பின் படகு சவாரி |
இரும்பு கம்பி தடுப்பு சுவர் அருகே நிற்கும் போது அருவியி லிருந்து கொட்டும் நீர் சாரலாக நம் மீது படும்போது நமக்கு உடம்பு சிலிர்க்கிறது. தண்ணீர் பச்சை நிறமாக இருக்கிறது. பல கனிமங்கள் மற்றும் உப்புகள் நீருடன் சேர்த்து அடித்து வரப்படு வதால் நீரின் நிறம் பச்சை நிறமாக இருக்கிறது என்கி றார்கள் அருவியை மிக அருகில் பார்ப்பதற்கு Maid of the mist என்கிற படகு சவாரி உண்டு. சாரலால் நனைந்துவிடுவோம் என்று படகு சவாரிக்கு மழை கோட்டு கொடுக்கி றார்கள். நயாகரா நதியில் கனடா பக்கத்து படகில் சிவப்பு நிற மழை கோட்டு அணிந்து கனடா தரப்பிலிருந்து செல்பவர்கள் அருவியின் அழகை ரசிப்பது போலவே அமெரிக்கா பக்கத்திலிருந்து வருபவர்கள் நீல நிற மழை கோட்டு அணிந்து அருவியின் அழகை ரசிக்கிறார்கள்.

நடைபாதை அருகே இருக்கும் புல்வெளியில் சாரல் பட்டு ஈரமாக இருக்கிறது நம் ஊரை நினைத்துக்கொள்கிறேன். இந்த புல்வெளியைஇப்படி விட்டு வைப்பார்களா? சுண்டல் விற்பார்கள்; பஜ்ஜி கடை போடுவார்கள். வண்டியில் ஐஸ் கிரீம் விற்பார்கள். மாங்காயை அழகாக அரை வட்டத்தில் கட் பண்ணி விற்பார்கள். ஆனால் அது கூட நன்றாகத்தானே இருக்கும்.
நயாகராவின் அழகை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. நேரம் ஆக ஆக சாரல் அதிகமாகிறது.தண்ணீர் கொட்டுவதில் அதிக .ஆவேசம் தெரிகிறது. இதனால் புகை மணடலம் இன்னும் பரவி வியாபிக்கிறது. மனமின்றி கிளம்பிய பின் திரும்பி பார்த்தால் தண்ணீருக்கு பதில் நம் கண்ணுக்கு தெரிவது புகை மண்டலம் மட்டுமே
அருவியின் சீற்றம் உங்கள் பதிவு
ReplyDeleteசுற்றுலா சென்ற பிரமை
உன் எழுத்தின் அழகு
இங்கிருந்து அருவியின் அழகை ரசிக்க வைத்தமைக்கு நன்றி ,எழுத்து பணி தொடர வாழ்ததுகிறேன்.சந்திரா.
பாராட்டுக்கு மிக்க நன்றி சந்திரா!!
Delete